பாதுகாப்பு அமைச்சர் கொங்கோ பயணம்!
கனேடிய படைகள் எதிர்காலத்தில் ஐ.நா அமைதிகாப்பு படையணியில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பில் தகவல்களை அறிந்துக்கொள்ள, கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், அடுத்த வாரமளவில் கொங்கோ ஜனநாயக குடியரசுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட தென்னாசிய நாடுகளின் படைகளை உள்ளடக்கிய ஐ.நா அமைதிகாப்பு படையின், கொங்கோ நடவடிக்கைக்கு தலைமைதாங்குமாறு, ஐ.நா முன்னர் கனடாவைக் கோரியிருந்தன் அடிப்படையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவுள்ள கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், அதன் ஒரு பகுதியாக இந்த பயணத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொங்கோ ஜனநாயக குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பாரிய அமைதி காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில், அவ்வாறான நடவடிக்கைகளில் பங்கெடுப்பதான முடிவுகளை மேற்கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும் என்று கனேடிய அதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.