ஸிக்கா வைரஸிற்கு பூரண நிவாரணம் தரும் தடுப்பு மருந்துகள்
நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸின் தாக்கங்கள் அமெரிக்க துணைக் கண்டங்களில் பாரிய அபாயத்தை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
இதன் காரணமாக பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி நடாத்துவதிலும் கேள்விக் குறி நிலவியிருந்தது.
இந் நோயை குணப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முன்னர் ஓரளவு நிவாரணம் தரக்கூடிய தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது இந் நோய்த் தாக்கத்தை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய 3 வகையான தடுப்பு மருந்துகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
இத் தடுப்பு மருந்துகள் Walter Reed Army Institute of Research, Beth Israel Deaconess Medical Centre, மற்றும் Harvard Medical School ஆகிய நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட குறித்த தடுப்பு மருந்துகள் 20 குரங்குகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இரண்டு வாரங்களின் பின்னர் எந்தவொரு குரங்கிலும் குறித்த நோய்த்தாக்கத்திற்கான அறிகுறிகளும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.