பொலிஸ் போதை ஒழிப்புப்பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் இன்று காலை அழிக்கப்பட்டது.
கொழும்பு பிரதம நீதவான் லால்ரணசிங்க பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்பட்டது. குறித்த கொக்கெய்ன் தொகை அங்கு நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொக்கேய்ன் தொகை அழிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரும் அங்கு சென்றுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.