9-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கராட்டே ஸ்ரூடியோ சொந்தக்காரர்
கனடா-பிரம்ரன் கராத்தே ஸ்ரூடியோ சொந்தக்காரர் ஒன்பது வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் குறிப்பிட்ட மாணவியுடன் தனியாக இருக்கும் சமயத்தில் பல தடவைகளில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கிடைத்த தகவலின் பெயரில் பீல் பிராந்திய பொலிஸ் பிரத்தியேமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரிவு புலன் விசாரனையில் ஈடுபட்டனர்.
சட்னம் றயாட் 57-வயது செப்டம்பர் 24 கைது செய்யப்பட்டார்.சந்தேக நபர் பிரம்ரனில் போவ்யாட் டிரைவிற்கு அருகில் அமைந்துள்ள றயாட் கராத்தே நிலையத்தின் உரிமையாளரும் ஆப்ரேட்டருமாவார்.
இவர் மிசிசாகா, பேர்லிங்ரன் மற்றும் ரொறொன்ரோ ஆகிய இடங்களிலும் கராத்தே பயிற்றுவிக்கின்றார் என பொலிசாரின் தகவல் தெரிவித்துள்ளது.
பிரத்தியேமாக பாதிக்கப்பட்டவர்களின் பிரிவு இக்குற்றச்சாட்டு குறித்த தங்களின் விசாரனையை தொடர்கின்றனர்.