காவல்துறையினர் வேடமிட்ட இரு கொள்ளையர்கள் 80,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் பெறுமதிமிக்க கற்கள் திருடியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை Saint-Maur-des-Fossés (Val-de-Marne) பகுதியில் இடம்பெற்றுள்ளது. பெற்றுக்கொண்ட முதல்கட்ட தகவல்களின் படி, இப்பகுதியில் வசிக்கும் முதியவர்களின் வீட்டிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் வேடமணிந்த இரு கொள்ளையர்கள், கதவை தட்டி வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். 94 மற்றும் 85 வயதுடைய இரு முதியவர்கள் மாத்திரமே வசிக்கும் வீடு அது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு உள் நுழைந்த போலி காவல்துறையினர் ‘அருகில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உங்கள் வீட்டில் ஏதேனும் கொள்ளை போயுள்ளதா என விசாரிக்க வந்துள்ளோம்’ என குறித்த கொள்ளையர்கள் முதியவர்களிடம் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
பின்னர், வீட்டுக்குள் இருந்த வெளிநாட்டு பணத்தாள்கள், தங்கக்காசுகள், நகைகள் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். Saint-Maur-des-Fossés பகுதி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.