டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மரியா ஆண்ட்ரேஜ்சிக், தனது பதக்கத்தை ஏலத்துக்கு விட்டு சொந்த நாடான போலந்தில் உள்ள ஒரு குழந்தையில் உயிர் காக்கும் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார்.
தனது முதல் ஒலிம்பிக் பதக்கத்தை 25 வயதான மரியா ஆண்ட்ரேஜ்சிக் 125,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் விடுத்துள்ளார்.
புதன்கிழமை, ஆண்ட்ரெஜ்சிக் முகநூல் பக்கத்தில் 8 மாத வயது மினோசெக் மாயிசா என்ற குழந்தக்கு நிதி திரட்டியதைக் கண்டறிந்தார். குழந்தைக்கு கடுமையான இதய குறைபாடு மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, மேலும் அவருக்கான பணத்தை திரட்ட உதவுவதற்காகவே அவர் ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விற்றுள்ளார்.
ஆண்ட்ரேஜிக் இந்த கோடையில் தனது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெறும் 2 சென்றி மீற்றர் தூரத்தில் ஒரு பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பினை நழுவவிட்டார்.