2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 866,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 148,078 ஆகும்.
மேலும், ரஷ்யாவிலிருந்து 105,427 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 85,206 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 60,575 சுற்றுலாப் பயணிகளும்,சீனாவிலிருந்து 45,642 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 50,268 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 36,763 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
