8 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கமாக உருமாறிய வெள்ளி
8 ஆண்டுகளுக்குப் பிறகு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் பெல்ஜிய வீராங்கனைகள் பெற்ற வெள்ளிப்பதக்கம், தற்போது தங்கமாக உருமாறி இருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் நடந்த மகளிருக்கான ரிலே தொடர் ஓட்டத்தில் பெல்ஜிய வீராங்கனைகள் Kim Gevaert, Elodie Ouedraogo, Hanna Marien மற்றும் Olivia Borlee ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
இதில், ரஷ்ய வீராங்கனைகள் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், அந்தப் போட்டியில் தங்கம் வென்ற ரஷ்ய மகளிர் அணியில் ஒருவரான யூலியா செர்மோசன்ஸ்கயா ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறிந்தப்பின் அவரின் தங்கம் பறிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, இரண்டாவது இடம் பிடித்த பெல்ஜிய வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.