75 வயதில் கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்கு திருமணம்
பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே, தனது 75 வயதில் மூன்றாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வரும் மார்சியா சிபிலே ஆஹோக்கியை திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து மூன்று முறை உலக கிண்ணம் வென்ற பீலே கூறியதாவது, கடந்த 2010ம் ஆண்டு முதல் இருவரும் பழக தொடங்கினோம், 42 வயது தொழிலதிபரான ஆஹோக்கியிடம் என்றென்றும் நான் அன்பை காண்கிறேன் என கூறியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜப்பானை சேர்ந்த ஆஹோக்கி, பீலேவுடன் பொது விழாக்களில் கலந்து கொள்ள தொடங்கினார்.
இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்ய முடிவு செய்தனர், ஆனால் அப்போது பீலேவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என கூறப்படுகிறது.
வரலாற்றில் சிறந்த கால்பந்து வீரராக திகழும் பீலே, 1363 ஆட்டத்தில் விளையாடி 1281 கோல் போட்டுள்ளார். கடந்த 1957 முதல் 1971 வரை பிரேசில் அணிக்காக 91 முறை விளையாடிவுள்ளார்.
களத்திற்கு வெளியே, அவர் முன்னதாகவே இரண்டு திருமணங்கள் செய்துள்ளார். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்வரும் செவ்வாய்கிழமை பீலே, Sao Pauloவில் மூன்றாவது முறையாக ஆஹோக்கியை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.