அந்தமானின் நிகோபார் தீவுகளில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணிக்கு நிகோபர் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணாமாக பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 94 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் பண்டா ஆசே நகரத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்தும், சேதங்கள் குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இதேபோன்று நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 17ம் தேதி காலை 9 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால், பல வீடுகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. மேலும் ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அதனை தொடர்ந்து நிக்கோபார் கடல்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலையில், இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக அந்தமானின் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.