இலங்கை பற்றிய அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: அல் ஹூசேன்!
இதன்போது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசேன் இலங்கை மற்றும் மியான்மார் பற்றி உரையாற்றினார்.
இலங்கைப் பற்றி கூட்டத்தொடரில் கருத்து தெரிவிக்கும் போது,
தனது அறிக்கையினை அழுத்தம் திருத்தமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் இதன் போது, சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் , காணிகள் மீள கையளிக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை இதன்போது முன் வைத்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய யூனியன் சார்பாக நெதர்லாந்து உரையாற்றியதுடன் சுவிஸ்சர்லாந்து, பிரிட்டன் தென் கொரியா போன்ற நாடுகளும் இலங்கை பற்றிய உரையில் அறிக்கையினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
இதன்போது, ரஷ்யா இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஐக்கிய அமெரிக்கா இன்னும் சில நொடிகளில் தனது கருத்தினை வெளியிடவுள்ளது.
18 மாத கால அவகாசத்தினை இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் தீர்மானம் வழங்கியிருந்ததோடு, ஒன்பதாவது மாதத்தில் வாய்மொழி அறிக்கையொன்றினை ஆணையாளர் சபைக்கு தெரிவிக்க வேண்டுமென தீர்மானம் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்படத்தக்கது.