அரிசி இறக்குதி செய்வதற்கு அனுமதி அளித்ததன் பின்னர் கடந்த 9ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை வெள்ளிக்கிழமை இறக்குதி செய்யப்பட்ட 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி சுங்கத்திணைக்களத்தினால் பரிசோதனை முடித்து துறைமுகத்தில் இருந்து வெளியேற்றி இருக்கிறோமென சுங்க திணைக்கள ஊடக பேச்சாளரும் சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இவ்வாறு இறக்குதி செய்யப்பட்டுள்ள 72ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியில் 32ஆயிரம் மெற்றிக் தொன் பச்சை அரிசியும் 32ஆயிரம் 40ஆயிரம் மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குகிறது. மேலும் சுங்கத்துக்கு அனுப்பப்படும் இறக்குமதி அரிசியை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த இறுதி திகதி கடந்த 20ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தபோதும் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதிவரை காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த காலப்பகுதிக்குள் மேலும் பாரிய தொகை அரிசி சுங்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு உகந்ததா என்றே நாங்கள் ஆரம்பமாக பரிசோதித்து பார்க்கிறோம். அதற்கே சில நாட்கள் செல்கின்றன. அதன் பின்னர் விரைவாக அதனை வெளியேற்ற நடவடிக்கை எடு்கிறோம்.
அத்துடன் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததில் இருந்து இன்றுவரை தனியார் துறையினரே அரிசி இறக்குமதி செய்திருக்கிறது. அரச நிறுவனங்களால் இதுவரை இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.