கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் 7 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் கிரஸ்டர் பிரதேசத்தில் அமைந்துள்ள 7 மாடி கட்டடத்தின் மேல் மாடியிலிருந்து விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாடியிலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 15 வயதுடைய , கிரஸ்டர் பிரதேசம் , கொழும்பு 4 பகுதியைச் சேர்ந்தவராவார்.
பம்பலப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.