உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள போரில் 7 ஆவது படைத் தளபதியை ரஷ்யா இழந்துள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது.
இந்த போர்க்களத்தில் ரஷ்யா ஏற்கனவே 6 படைத்தளபதிகளை பறிகொடுத்துள்ளது.
இந்த நிலையில் 7 ஆவது படைத்தளபதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48). இவர் 49 ஆவது கூட்டுப்படையின் தளபதி ஆவார்.
உக்ரேனுக்கு ரஷ்யாவால் 20 படைத்தளபதிகள் அனுப்பப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 13 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இது ரஷ்யாவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட 7 ஆவது படைத்தளபதி யாகோவ் ரெசான்ட்சேவ், ரஷ்ய துருப்புகளிடையே மன உறுதி குறைந்ததால் முன் வரிசையில் நின்று போரிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு, அதில் அவர் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சொர்னோபைவ்கா விமான தளத்தில் உக்ரேன் படைகளால் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.