ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பிளவுபடாமல் நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இன்றைய ஜனாதிபதியோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ காரணமல்ல தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் யுத்தம் சுனாமி உட்பட ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம் பெற்றுள்ள பேரழிவுகளுமே காரணம். எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அது மேலும் கூறுகையில்
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் நேர்மையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மூலம் அதற்கான அடிப்படை வேலைத் திட்டங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக எரிபொருள்,சமையல் எரிவாயு,உரம்,மின்சார துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதன் மூலம் வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா துறையை முன்னேற்றுவதற்கான விடயங்களும் அதில் முன் வைக்கப்பட்டுள்ளன.நாட்டில் அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதன் காரணமாகவே அனைவரும் ஒன்றிணைந்து சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என நாட்டு மக்கள் கேட்கின்றனர்.
பொதுஜன பெரமுனவை பிரதானமாகக் கொண்ட அரசாங்கத்திற்கு தற்போது 69 லட்சம் மக்களின் ஆதரவு இன்று இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.எனினும் நாடு தற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடி நிலையில் பிளவு படுவதை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.
மக்கள் வாக்குகளின் மூலம் பெற்ற பலம் இன்னும் பாராளுமன்றத்திற்கு உள்ளது அதற்கிணங்க அமைச்சு பொறுப்பு அல்ல. மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அனைவரினதம் பொறுப்பாகும். வன்முறை,வீடுகளுக்கு தீவைத்தல், போராட்டங்கள் என்பன இதற்கு தீர்வு அல்ல.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய ஜனாதிபதியை குற்றம் கூறி பயனில்லை
தொடர்ந்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள்,மூன்று தசாப்த கால யுத்தம் தென்மாகாண கிளர்ச்சி,83 கறுப்பு ஜூலை, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல், கொரோனா சூழ்நிலை என பல விதமான பாதிப்புகளும் இதற்கு காரணம்.
30 வருட யுத்தம், விமான நிலையம், மத்திய வங்கி, தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்கள் என 2009 ஆம் ஆண்டு வரை பாரிய பாதிப்புகளை நாடு எதிர்நோக்கியது .அனைவரும் இணைந்து இந்த நாட்டை மீண்டும் பொருளாதாரத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஜேவிபிக்கும் அந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் போல் தான் இப்போதும் செயல்படுகின்றனர் என்றார்