ரஜினியின் உடல்நிலையை முன்வைத்து பரவும் வதந்திகள்: குடும்பத்தினர் விளக்கம்

ரஜினியின் உடல்நிலையை முன்வைத்து பரவும் வதந்திகள்: குடும்பத்தினர் விளக்கம்

 

  ரஜினியின் உடல்நிலை குறித்து வெளியான வதந்திகளுக்கு அவருடைய குடும்பத்தினர் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

‘கபாலி’ படத்தின் பணிகள் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு ஒய்வுக்கு சென்றார் ரஜினி. ஆனால், ரஜினி ஒய்வுக்கு செல்லவில்லை, அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியானது.

உடல்நிலை வதந்தி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், “அப்பாவுடன் அமெரிக்காவில் ஊர்சுற்றி வருகிறேன்” என்று அவருடைய ஐஸ்வர்யா தனுஷ் புகைப்படத்துடன் பகிர்ந்தார். ஆனால், பலரும் அவர் பதிந்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது ரஜினி போன்று தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தார்கள்.

ரஜினி குறித்து வதந்தி

இந்நிலையில், இன்று (ஜூன் 16) காலை ரஜினியின் உடல்நிலை குறித்து இணையத்தில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. இதனால், மீண்டும் சர்ச்சை எழுந்தது.

இது குறித்து ரஜினி குடும்பத்தினர் கூறும்போது, “அவர் நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவார்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ரஜினியின் மேலாளர் சுதாகர், “தலைவர் ரஜினி சார் மிகவும் நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ரஜினி ரசிகர்கள் தவறான தகவல் வெளியிட்ட இணையதளத்திற்கு எதிராக புகார் அளித்திருக்கிறார்கள்.

அத்துடன், தனது உடல்நிலை குறித்து விரைவில் ட்விட்டர் பக்கத்தில் ரஜினியே விளக்கம் அளிப்பார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News