சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக் கூடு ஒன்றை அந்த கிராம மக்கள் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவின் வடப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் 60 அடி நீளம் கொண்ட டிராகனின் எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக சீனா பாரம்பரியத்தில் காணப்படும் டிராகன்களுக்கு இறக்கைகள் இருக்காது. ஆனாலும் அவை காற்றில் மிதக்கும். ஆனால் மேற்கத்திய புராணங்களில் காணப்படும் டிராகனானது இறக்கைகள் கொண்டதாகும்.தற்போது சீனாவின் Zhangjiakou நகர மக்கள் கண்டெடுத்துள்ள குறித்த டிராகனானது இறக்கைகளுடன் காணப்படுகிறது.
இந்த டிராகனானது பெரிய தலையுடனும் இரண்டு குட்டி கைகளுடனும் நீளமான வாலுடனும் உள்ளது.குறித்த டிராகன் எப்படி எலும்புக்கூடாக இந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது என அங்குள்ள மக்களுக்கு இதுவரை விளங்கவில்லை என்றே தெரிவித்துள்ளனர்.
ஆனால் குறித்த புகைப்படத்தை பார்த்த சீனாவின் சமூகவலைத்தள பயனர்கள், இது ஏதேனும் திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட எலும்புக்கூடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை குறித்த டிராகன் தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவக் எதுவும் நகர நிர்வாகத்திடம் இருந்தோ ஏதேனும் திரைப்பட நிறுவனத்திடம் இருந்தோ வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.