ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில், ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி இங்கிலாந்து வீரர் ரோஸ் வைட்லே உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2017 நெட்வெஸ்ட் ரி-ருவென்ரி தொடரில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடிய ரோஸ் வைட்லே, நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற யார்க்க்ஷைர் அணிக்கெதிரான போட்டியில் இந்த சாதனையை நிலைநாட்டினார்.
இரண்டாவது இன்னிங்ஸிற்காக யார்க்க்ஷைர் அணியின் கார்வரின் வீசிய 16வது ஓவரை எதிர்கொண்ட ரோஸ் வைட்லே, 6 பந்துகளில் 6 சிக்ஸ்ர்களை விளாசி சாதனை படைத்தார்.
இப்போட்டியில், ரோஸ் வைட்லே அதிரடி காட்டினாலும், யார்க்க்ஷைர் அணி நிர்ணயித்த 233 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய வொர்செஸ்டர்ஷைர் அணி, 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.