6ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் ஊடாக கோரப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் பாடசாலைகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி மதியம் 12 மணி முதல் மே மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இதற்கான காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளம் ஊடாக ஒன்லைன் மூலமான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.