மைதானத்தின் கூரைக்கு மேல் பந்தை அடித்து மிரட்டிய பென் கட்டிங்: மிரட்டும் வீடியோ!
ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியின் போது ஐதராபாத் அணி வீரர் பென் கட்டிங் மைதானத்தின் கூரைக்கு மேல் பந்தை அடித்து மிரட்டினார்.
இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது நினைவுக்கூரத்தக்கது.
முன்னதாக, நாணய சுழற்சியில் வென்ற வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, ஆறாவது வீரராக களமிறங்கிய கட்டிங் 15 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர் அடித்து 39 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் வாட்சன் வீசிய 20வது ஒவரின் இரண்டாவது பந்தை பென் கட்டிங் மைதானத்தின் கூரைக்கு மேல் சரியாக 117 மீட்டர் தூரம் பந்தை அடித்து மிரட்டினார்.
பின்னர், பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட பென் கட்டிங் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்ட்டார்.
போட்டிக்கு பிறகு பேட்டியளித்த பென் கட்டிங் கூறியதாவது, இவ்வளவு மக்களுக்கு மத்தியில் விளையாடுவது உற்சாகமாக இருந்ததாகவும், புவனேஷ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சு தங்கள் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.