555நாட்கள் இருதயம் இன்றி வாழ்ந்த மனிதன்!.
யு.எஸ்.-மிச்சிக்கன் என்ற இடத்தை சேர்ந்த 25-வயதுடைய மனிதனொருவர் ஒரு வருடங்களிற்கு மேலாக அவரது உடலிற்குள் இருதயமின்றி வாழந்ததன் பின்னர் இருதய மாற்று சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரான் லாக்கின் என்பவர் 555-நாட்களிற்கும் மேலாக முதுகுப்புறத்தில் தோள்பை ஒன்றிற்குள் வைத்து கட்டப்பட்ட செயற்கை இருதயத்துடன் வாழந்துள்ளார்.
இந்த கருவி சகல செயற்பாட்டுக்களையும் செய்து வந்தது. இவரை உயிருடனும் வைத்திருந்தது. SynCardia என்ற இக்கையடக்க கருவி 6-கிலோ கிராம் எடையுடையது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு வந்திருந்தது ஒரு மரபியல் நிலை குடும்ப இதயதசை நோயாகும். இவரது இளைய சகோதரரான டொமினிக் என்பவர் இதே போன்று பாதிக்கப்பட்டு இருதய மாற்று சிகிச்சை பெற்றார்.
2014ல் நிலைமை மோசமடைந்து உடலிற்கு தேவையான இரத்தத்தை வெளிக்கொணர முடியாத நிலைக்கு இதயம் தள்ளப்பட்டது.இதனால் வைத்தியர்கள் இவரது இதயத்தை முற்றாக நீக்க முடிவு செய்தனர்.
மிச்சிக்கனில் முதல் தடவையாக லாக்கினிற்கு முற்றிலும் செயற்கையான கையடக்க இருதயம் இணைக்கப்பட்டது.
18மாதங்களிற்கு பின்னர் இவருக்கு பொருத்தமான நன்கொடையாளர் கிடைத்தார்.ஓரு மாதத்திற்கு முன்னர் இருதயம் மாற்றப்பட்டது.