இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் ஐம்பதிற்கு மேற்பட்ட விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும். இசையை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் “இசை எம்பயர்” என்ற இசை சார்ந்த கம்பனியினை உருவாக்கி புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுடன் சர்வதேசரீதியில் உள்ள கலைனர்களையும் உள்வாங்கி எதிர்காலங்களில் பல்வேறுவிதமான இசை நிகழ்சிகளை இசைப்பிரியர்களுக்கு வழங்கும் நோக்குடனும் கனேடிய பாடகர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குரிய ஒரு அடையாளத்தினை உருவாக்கும் நோக்குடனேயே திரு. திருமதி பரமநாதன் அவர்களின் பிள்ளைகள் பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோரின் விடா முயற்சியினாலேயே “இசை எம்பயர்” என்ற அமைப்பு ஆரம்பமானது. பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோர் கல்வியில் சிறப்பு தேர்ச்சிபெற்று சாதனைகளை சாதித்துவரும் இசைவல்லுனர்கள். ஒரு இசைக்குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். பிரதாயினி அவர்கள் மருத்துவ துறையில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஓர் சிறந்த பட்டதாரியாக திகழ்ந்துவருவதனை நாம் அறிவோம். பல்வேறு சமூகம் சார்ந்த துறைகளில் பல ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை செயல்வடிவில் நடாத்தி பலவிருதுகளை பெற்று சமூகத்தில் பல பாராடுதல்களை பெற்றுக்கொண்டவர்கள். அதேபோல அவர்களின் சகோதரி விதுஷாயினி பரமநாதன் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுபோல இசையில் ஓர் தமிழரசியாக திகழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பல பாடல்களை நான் கேட்டு ரசித்ததுண்டு. காதிற்கு இனிமை சேர்க்கும் இனிமையான ராகங்கள் சொரியும் ஒரு இளம்தென்றல். அவர்களின் பாடல்களின் வார்த்தைகளினால் கிடைக்கும் சுகத்தில் இனிமை கலந்த சந்தோசத்துடன் கூடிய மகிழ்ச்சி பொங்கும். இவ்வாறாக இந்த இரண்டு பெண் சகோதரிகளும் சேர்ந்தே கனடாவின் இன்றைய மிகப்பெரிய கலைனர்களை உள்வாங்கிய “இசை எம்பயர்” என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாகவும் ஆரம்ப கர்த்தாக்களாகவும் இருந்துவருவதுடன், அவர்கள் இசை மீது கொண்டுள்ள ஆர்வத்தினையும், தமிழர்களின் இசையுடன் கூடிய கவின் கலைகளை பாதுகாப்பதில் எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்பதினை பறைசாற்றுகின்றது. இசை எம்பயர் என்ற நிறுவனத்தின் முதலாவது இசையுடன் கூடிய “இசை நடனத்திருவிழா” வருகின்ற வெள்ளிக்கிழமை சரியாக ஆறுமணியளவில் ஆரம்பிக்கப்படும் என்பதை நாங்கள் அறிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. கனடாவில் நாங்கள் பல்வேறுவிதமான இசை நிகழ்வுகளை பார்த்து ரசித்திருக்கின்றோம். ஆனால் இசை எம்பயரினால் நடத்தப்படும் மாபெரும் இசைத் திருவிழாவில் முழுமையாக நமது 75 இற்கும் மேற்பட்ட பாடகர்கள் மற்றும் நடன தாரகைகள் பங்குபற்றுவது ஒரு வரலாற்று சாதனையாகவே நான் கருதுகின்றேன். புலம்பெயர்ந்துவாழும் கனேடிய தமிழர்களின் வரலாற்றில் நமது பாடகர்களை உள்வாங்கி பல நிகழ்வுகள் நடைபெற்றிருப்பினும் இசை எம்பயர் நிறுவனத்தின் உரிமையாளர்களினால் மிக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் இசைத் திருவிழாவாக ஏராளமான கனேடிய பாடகர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் நன்கு திட்டமிட்டு அவர்களுக்குரிய சிறப்பான கௌரவங்களையும் வழங்கும் நோக்குடன் பிரபல பின்னணி திரைப்படபாடகரும், இசை அமைப்பாளரும், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பிரதம நீதிபதியாக செயற்பட்டுவருபவருமான ஸ்ரீநிவாஸ் அவர்களை சிறப்பு விருந்தினராக வரவழைத்து விழாவினை நடத்துவது இதுவே கனடா வரலாற்றில் முதற்தடவை எனக்கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். மிகப்பெரிய களியாட்டு மண்டபம், சிறப்பான உணவு விருந்து, இனிமை சேர்க்கும் பாடல்கள், அழகு ஜொலிக்கும் இனிமையான குரல்வளம்கொண்ட பாடகர்கள், ராம் அகராதியின் நடன இசைக்குழுவினர், பாடல்களுக்கு இசைவழங்கும் சிறப்பு தேர்ச்சி பெற்ற இசைக்குழுவினர் என எல்லாம் சேர்ந்த ஒரு இசை மழை பொழியும் சிறப்பான கோர்வையாக இணைய இருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வரலாற்றில் ஒரு சாதனை படைக்கும் முத்திரையாகவே நான் கருதுகின்றேன். இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற வாழ்த்துவதுடன், இதில் பங்குபற்றும் கனேடிய பாடகர்களின் திறமைகளை கண்டுகளிக்க பெருந்திரளாக நமதுமக்கள் அணிதிரளவேண்டுமெனவும், அவர்களின் கலைத் துறைசார்ந்த பயணம் மென்மேலும் வளந்துவர வாழ்த்துவதுடன் இசை எம்பயர் அதிபர்களான திரு. திருமதி பரமநாதன் அவர்களின் பிள்ளைகள் பிரதாயினி பரமநாதன் மற்றும் விதுஷாயினி பரமநாதன் ஆகியோரின் அபூர்வமான முயற்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன், எதிர்வரும் காலங்களில் எவ்வித தொய்வும் இன்றி பல நிகழ்சிகளை தொடர்ச்சியாக நடத்தவேண்டுமெனவும் விண்ணப்பித்து விடைபெறும்,
பிரதம ஆசிரியர், Langes, FCPA, FCGA
EasyNews Latestnews
Easy24news.com