வளைகுடா தலைவர்களின் உதவியை நாடும் ஒபாமா
திரு ஒபாமாவின் பதவிக் காலம் இன்னும் ஒன்பது மாதங் களில் முடிவுறவுள்ள நிலையில் ஈரானுடனான அமெரிக்காவின் உறவில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் குறித்து அதிருப்தி கொண்டுள்ள வளைகுடா நாடுகளிடம் அமெரிக்காவின் நிலையை அவர் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. ரி-யாத் மாநாட்டில் உரை யாற்றிய திரு ஒபாமா, ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் வளைகுடா நாடுகளும் இன்னும் அதிகமாகப் பங்காற்ற முடியும் என்று தாம் நம்புவதாகச் சொன் னார்.
ரியாத்தில் சவூதி மன்னர் சல்மானை அமெரிக்க அதிபர் ஒபாமா சந்தித்துப் பேசினார். ஐஎஸ் பயங்கரவாதிகளின் மிரட்டல், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் நீடிக்கும் சண்டை, ஏமன் அமைதிப் பேச்சு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினர். ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் வளைகுடா நாடுகளின் உதவியை நாடுவதற்காக திரு ஒபாமா ரியாத் சென்றுள்ளார்.