சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 53 பெண்களை தான் திருமணம் செய்துள்ளதாக கூறுகிறார்.
63 வயதான, அபு அப்துல்லா எனும் இவர், சவூதி அரேபியாவின் எம்பிசி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் தற்போது தனதுக்கு ஒரு மனைவியே உள்ளார் எனவும், மீண்டும் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘நான் முதல் தவையாக திருமணம் செய்தபோது, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய எண்ணியிருக்கவில்லை. ஆனால், பின்னர் பிரச்சினைகள் ஏற்பட்டன.
எனக்கு 23 வயதான போது நான் மீண்டும் திருமணம் செய்வதற்குத் தீர்மானித்தேன். இத்தீர்மானம் குறித்து எனது மனைவிக்கு தெரிவித்தேன்’ எனக் கூறியுள்ளார்.
பின்னர், முதல் மனைவிக்கும் இரண்டாவது மனைவிக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டபோது, தான் 3 ஆவது மற்றும் 4 ஆவது தடவையாக திருமணம் செய்வதற்கு தீர்மானித்தாகவும் அபு அப்துல்லா கூறியுள்ளார். பின்னர் முதல் 3 மனைவிகளையும் தான் விவாகரத்து செய்ததாக அவர் கூறுகிறார்.
தன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய பெண்ணொருவரை தேடும் வகையிலேயே தான் பல தடவைகள் திருமணம் செய்ததாகவும், தனது அனைத்து மனைவியருடனும் நியாயமாக நடந்துகொள்ள தான் முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
’53 பெண்களையும் நீண்ட காலப்பகுதியிலேயே நான் திருமணம் செய்தேன், முதல்தடவை திருமணம் செய்தபோது எனக்கு 20 வயது. அப்பெண் என்னைவிட 6 வயது அதிகமானவராக இருந்தார்’ என்கிறார் அபு அப்துல்லா.
‘உலகிலுள்ள அனைத்து ஆண்களும், ஒரே பெண்ணுடன் எப்போதும் வாழவே விரும்புகின்றனர். ஸ்திரத்தன்மையான இளம் பெண்ணிடம் அல்ல, வயதான பெண்ணிடமே கிடைக்கும்’ என்கிறார் அவர்.
சவூதி அரேபிய பெண்களையே பெரும்பாலும் திருமணம் செய்தேன். வியாபார விடயமாக வெளிநாட்டுப் பயணம் சென்றபோது வெளிநாட்டுப் பெண்களையும் திருமணம் செய்துள்ளேன்.
வெளிநாடுகளில் நான் 3 முத் 4 மாதங்கள் தங்கியிருப்பேன். எனவே, தீய வழியில் செல்வதிலிருந்து என்னை பாதுகாத்து கொள்வதற்காக நான் திருமணம் செய்தேன்’ எனவும் அபு அப்துல்லா தெரிவித்துள்ளார்.