அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.இந்தநிலையில், ஒஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படுவது போல், 8 பேரும் தலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.இதனால், கொலையாளிகள் அதிக எண்ணிக்கையில் வந்து கொலையை அரங்கேற்றியிருக்கலாம் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். 3 வயதுக்கு கீழ் உள்ள 3 குழந்தைகளை 3 பேரை மட்டும் கொலை செய்த நபர்கள் உயிருடன் விட்டுச்சென்றுள்ளனர்.
இந்த கொடூர கொலைகள் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த கொலையை அரங்கேற்றியவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்டிருப்பார்கள் என்றும் மிகவும் அபாயகரமானவர்கள் எனவும் பைக் மாகாண போலீஸ் அதிகாரி ஷெரிப்பி சார்லஸ் ரீடர் தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகாமையில் உள்ள பள்ளிகள் அனைத்தும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
