கனடாவில் மட்டுமின்றி உலகளாவியரீதியில் பல தொழில் நிறுவனங்களை அமைத்து தொழில் முயற்சிகளில் தொடர்ச்சியாக வெற்றிவாகை ஈட்டிவரும் பிரபல தொழில் அதிபர், சமூக தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் தலைமைத்துவத்திலும் உரிமையாளராகவும் நேரடிக்ககட்டுப்பாட்டில் கனடாவில் சரவணபவன் என்ற உணவகத்தினை ஸ்காபுரோ மற்றும் மிஸ்சிசாகா ஆகிய நகரங்களில் கிளைகளை மிகவும் சிறப்பான முறையில் நடாத்திவரும் அவர்களின் சரவணபவன் கிளை அமைந்துள்ள ஸ்காபுரோவில் மிகப்பொலிவுடன் பல வாடிக்கையாளர்களின் சுத்தமான சைவ உணவு வகைகளை வழங்கிவருகின்ற சரவணபவன் உணவகம் நோக்கி சென்றேன். மாண்புமிகு திரு கணேஷன் சுகுமாரின் சமூக வேலைத் திட்டங்கள் பற்றி தமிழர்களாகிய நாங்கள் நன்கறிவோம். சரவணபவன் உணவகம் பல வருடங்களாக கனேடிய வைத்தியசாலைக்கு நன்கொடைகளை வழங்கிவருவதனையும் நாம் அறிவோம். இந்த வகையில் இதுவரை 50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும். அண்மையில் டொராண்டோவில் நடைபெற்ற Blends of Barathanaatiyam என்ற நிகழ்ச்சியில் கூட வைத்தியசாலைக்கு என சேர்க்கப்பட 12,001 டொலர்கள் நிதி சேகரிப்பில் கணேஷன் சுகுமார் அவர்களும் பிரதான நன்கொடையாளியாக பங்கெடுத்திருப்பதையும் நாம் இந்த நேரத்தில் நினைவு படுத்துவது சாலச் சிறந்ததாகும். உணவகத்தின் முன்னால் தாராளமான வாகன தரிப்பிட வசதி இருந்தது. வாகனத்தில் இருந்து இறங்கியதும் எதிரில் வரவேற்றது சரவணபவன் உணவகம். தேடினேன் வந்தது. நாடினேன் தந்தது நல்ல உணவை சரவணபவன் என்ற சந்தோசமான உணர்வுடன் உள்நுழைந்தேன். சுத்தமான சுழலில், சுவையான சுகாதாரமான உணவு, வாடிக்கையாளரை உபசரிக்கும் பாங்கு என மனசுக்கும், வயிற்றுக்கும் இதம் தந்தது சரவணபவன். சரவணபவன் முகாமையாளர் வாசலில் நின்று வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பதை கண்டுகொண்டேன். அடடா எத்தனை உணவுகள்! உணவகம் நிறைந்த வாடிக்கையார்கள். பல்லின வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்து பல்வேறுவகையான உணவு வகைகளை உண்டு ருசிப்பதை அவதானித்தேன். மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார், விதவிதமான கண்ணனுக்கு விருந்தளித்த விறுவிறு சட்னிகள், புது பெண்ணாய் பூரி மசால், பட்டு சப்பாத்தி, கொஞ்சும் குருமா, இளமை ததும்பும் முறுகல் ரவா தோசை, சல் என்று நாவில் இறங்கும் சாம்பார் வடை, வழுக்கி விழும் நெய் பொங்கல், ஆட்டம் போடும் அடை அவியல், தயிர் சேமியா, வித்யாசமாய் ஓட்ஸ் உப்புமா, ஐந்து வகை தோசை, நித்தமும் கமகம, சரி, கம கமன்னு சங்கீதம் பாட வைக்கும் காபியும் உண்டு. சில்லுனு பழசாறும் உண்டு. மசாலா தோசையின் இமயம் சரவணபவன் என்று கூறினால் அதுமிகையாகாது. விதம் விதமான பல அளவுகளிலான மசாலா தோசை. மேலாக உளுந்துவடை தாராளமாக வழங்குவதுடன் மினி மசாலா தோசையினை ஒவ்வொரு வாடிக்கையாளரினை நோக்கி கொடுக்கின்ற சேவையினை நேரில் பார்த்தேன். சரவணபவன் வெற்றிக்கு காரணம் அதன் நிறுவனர் உழைப்பால் உயர்ந்த மனிதர், திரு கணேஷன் சுகுமார் அவர்கள். வாடிக்கையாளர்களே தெய்வம். அவர்தம் சேவையை திருப்பணி என்ற மனப்பாங்கு உடையவர். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்பதற்கேற்ப உயர்விலும் எளிமை மிக்கவர். தன் தொழில் அக்கறையால், கடின வெற்றியை தக்க வைத்து, தொடர் வெற்றிகளின் சாதனையாய் சரவணாவின் பல்வேறு கிளைகளை பரப்பியுள்ளார். பல வாடிக்கையாளர்களின் வேண்டுதல்களுக்கு இணங்க மேலும் பல கிளைகளை நிறுவும் முயற்சியில் ஆர்வத்துடன் உள்ளார்கள். நித்தம் ஒரு சுவைக்கும், மதிய உணவுக்கும் ஏன் காலையில் இருந்து இரவு வரையும் எந்த நேரத்திலும் தேவையான சுத்தமான சைவ உணவுவகைகளை உண்டு ருசிக்க சரவணபவன் என்ற உணவகமே சிறந்தது எனக்கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். ஸ்காபுரோ மற்றும் மிஸ்சிசாகா நகரில் வசிப்பவர்களும் இரண்டு நகருக்கும் வருகை தரும் மக்களே! சுவையான சைவ உணவு தரும் சரவணாவில் உண்டு மகிழுங்கள். சரவணபவானின் Buffetக்கு ஓர் தனித்துவமான சிறப்பு உண்டு. விதம் விதமான உணவுவகைகள் குறிப்பாக சைவ கறிவகைகள், இனிமை தரும் பலகார வகைகள், பல நிறங்களிலான சுவை தரும் சட்னிகள், பல பிரிவுகளைகொண்ட வெள்ளித்தட்டுக்கள், உணவினை ருசித்து சாப்பிடுகின்றபோது இன்பம் கலந்த சந்தோசத்துடன் உண்டு மகிழ காதிற்கு இனிமை சேர்க்கும் தேன்மதுர பாடல்கள் மற்றும் ஒளிபரப்பு செய்யும் வீடியோ பதிவுகள் என எல்லாம் ஒன்று சேர்ந்த உணவகம்தான் சரவணபவன். ஞாயிற்று கிழமை மதிய உணவு நேரத்தில் சென்றிருந்த நான் சமையலறையில் மிகவும் சுறு சுறுப்பாக பல்வேறுவிதமான உணவு வகைகளை தயாரித்துக்கொண்டிருந்த உணவு தயாரிப்பு வித்தகரும் தலைமை சமையலறை அதிகாரியுடன் ஓர் நேர்காணலை ஏற்படுத்தி இருந்தேன். அவர்கள் பல்வேறுவிதமான தோசை வகைகளை எவ்வாறு செய்வது என்பதினை விளக்கி நான்கு அடி நீளமான மசாலா தோசையினை எவ்வாறு தயாரிப்பது என்றும் அதே நீளமுள்ள பேப்பர் தோசையினை எவ்வாறு செய்வதென்றும் விளக்கங்களை தந்து அவற்றை தயாரித்தும் காட்டினார்கள். மிகவும் சிறப்பு தேர்ச்சி பெற்ற சமையல் வித்தகர்களை சரவணபவன் உணவகம் கொடிருப்பதனை நேரில் அவதானித்தேன். மேலும் அங்கு பிரதான சமையல் அதிகாரிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் கூட மிகவும் சுத்தமான முறையில் உடனுக்குடன் சகல உணவு வகைகளையும் தயாரித்துக்கொண்டிருப்பதனையும் அவதானித்தேன். வாடிக்கையாளர்களை தொடர்ச்சியாக சிறப்பான முறையில் பாராமரிப்பதனையும் நேரில் அவதானித்துக்கொண்டென். ஒரு கட்டத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தும் தொழில் புரிபவர்கள் அனைவரும் அவர்களை இன்முகத்துடன் அதிக நேரம் காத்திருக்காமல் உள்வாங்கிக்கொண்டதனையும் அவதானித்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். சிறப்பான சைவ உணவகம் சரவணபவன் என்று கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். அண்மையில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் சரவணபவன் உணவகம் ஐந்து நட்சத்திர நிலையில் முதன்மை நிலையில் சைவ உணவகமாக இடம்பிடித்திருப்பதனையும் கூறுவதில் பெருமிதம் கொள்கின்றேன். ஒரு தமிழரின் தொழில் முயற்சி இந்த கனேடிய மண்ணில் நிலையான அந்தஸ்தினை பெற்றிருப்பதையிட்டு மகிழ்வதோடு தமிழ் மக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் கணேஷன் சுகுமாரின் தொழில் முயற்சிகளை வாழ்த்துவதுடன் அவர்களின் தொடர்ச்சியான நிதி அன்பளிப்பு திட்டங்கள் எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுத்து செல்ல வாழ்த்துவதோடு அவர்கள் தமிழர் தாயகத்தில் உள்ள இந்து ஆலயங்களின் புனருத்தாரனத்திற்கு வழங்கிவரும் நிதிப்பங்களிப்பிற்கு நன்றிகளை கூறுவதுடன், மேலாக டொராண்டோவில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களான ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திர தேர் திருவிழாவின் உபயகாரர்களாக பலவருடங்கள் இருப்பதுடன் மட்டுமன்றி ஏனைய பல இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் ஆற்றிவரும் சகல நிதி உதவிகளுக்கும் உலகத் தமிழர்கள் சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Langes, FCPA, FCGA
EasyNews Latestnews
easy24news.com
Canada Hindu Temple Association
Comments 1