துறைமுகத்தில் பணியாற்றி வரும் பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக அமைச்சர் அர்ஜுன ரணதுங் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தமது கீர்த்தியை சீர்குழைக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்று துறைமுகத்தில் பணியாற்றும் பிரசன்ன மற்றும் லால் பன்கமுவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் (17000/DMR/2017,1701/DMR/2017 and 1702/DMR/2017) வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், பிரசன்ன மற்றும் லால் பன்கமுவ ஆகியோர் துறைமுக அதிகார சபையின் தலைவராக தங்களை காட்டிக்கொள்வதோடு மட்டுமல்லாது மக்களை தவறாக வழிநடத்துகின்றமை கண்டிக்கத்தக்கது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது நற்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றமை குறித்தே அமைச்சர் தலா ஒவ்வொருவரும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.