500 கிலோ எடையுள்ள உலகின் மிக குண்டான எகிப்து பெண்
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் 500 கிலோ எடையுடன் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார். உடல் எடை தொடர்ந்து அதிகரித்தால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். 25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். உணவு சாப்பிடுதல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.
தொடக்கத்தில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது. அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.