500வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்தில் இந்தியாவை கதறவிட்ட நியூசிலாந்து
இந்திய கிரிக்கெட் அணியின் 500வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் (32) ஓரளவு நல்ல தொடக்கம் கொடுக்க, அடுத்து முரளி விஜய் (65), புஜாரா (62) நிதானமாக ஆடி அரைசதம் கடந்தனர். அணித்தலைவர் விராட் கோஹ்லி (9) நிலைக்கவில்லை. ரஹானேவும் (18) ஏமாற்றினார்.
பின்னர் இணைந்த அஸ்வின், ரோஹித் ஓட்டங்கள் சேர்ப்பில் ஈடுபட்டனர். ரோஹித் 35 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அஸ்வின் (40) அரைசதத்தை தவறவிட்டார். சகா, முகமது சமி டக்-அவுட்டாக வெளியேறினர்.
முதல் நாள் ஆட்டநேரமுடிவில் இந்தியா 90 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 291 ஓட்டங்களை சேர்த்துள்ளது. ஜடேஜா (16), உமேஷ் யாதவ் (8) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மார்க் கிராக் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
நெய்ல் வாக்னர், சோதி தலா 3 விக்கெட்டுகளையும், பவுல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.