நாட்டில் 50 லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விரிவான விளம்பரம் விரைவில் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளா்ர.
இது குறித்து டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
எரிபொருள் தாங்கிகள், விநியோக அலகுகள் மற்றும் பிற உபகரணங்களுக்கான முதலீடு லங்கா ஐஓசியினால் வழங்கப்படும், அதேநேரத்தில் நிலம் மற்றும் உள்கட்டமைப்பு செலவுகள் விநியோகஸ்தர்களின் பக்கம் இருக்கும். தேவையான நிலப்பரப்பு விண்ணப்பதாரருக்கு சொந்தமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.