சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிகளையும், ஐந்து மில்லியன் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
இந்நிலையில் சீனா இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புக் கொண்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.