உக்ரேன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி அடுத்த கட்டமாக ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து வெளிப்படைத்தன்மைக்காக அடுத்த 48 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை கலந்துரையாடலை கோருவதாக உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.
உக்ரேனின் எல்லையில் சுமார் 100,000 வீரர்கள் குவிக்கப்பட்ட போதிலும் உக்ரேன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டத்தையும் ரஷ்யா மறுத்துள்ளது.
ஆனால் ரஷ்யா “எந்த நேரத்திலும்” வான்வழி குண்டுவீச்சுகளை மேற்கொள்ளலாம் என்று அமெரிக்க எச்சரித்து வருவதனால் பல நாடுகள் உக்ரேனை விட்டு வெளியேறுமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]