நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்ெகடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு உரிய விதத்தில் ஒத்துழைப்புகளை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்ைக எடுத்துள்ளது.
எனவே, இந்தக் கலப்பு முறை வாக் ெகடுப்பு குறித்து வாக்காளர்கள் எதுவித சந்தேகமோ, குழப்பமோ அடைய வேண்டிய அவசியம் கிடையாதென்று தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.
புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்ேக சரியான தௌிவு இல்லாததால், அவர்களுக்குத் தௌிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய பிரதிஆணையாளர் மொகமட், வாக்காளர்களுக்ேகா, வேட்பாளர்களுக்ேகா மேலதிகத் தெளிவு அவசியம் எனில், அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.