இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்களின் போது 45 சிறுவர்கள் கொல்லப்பட்டமை மிகுந்த வேதனையளிப்பதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
பல சிறுவர்கள் அதிர்ச்சியூட்டும் மற்றும் அறிவின்றி மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு சாட்சியாகியுள்ளனர் என்றும் யுனிசெப் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் பெற்றோரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க யுனிசெப் நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுவர்களுக்கு உளவியல்- சமூக ஆதரவு பிரதான தேவை என்று இனங்காணப்பட்டுள்ளது. எனவே சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான உளவியல்- சமூக முதலுதவியை யுனிசெப் வழங்கி வருதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.