அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் சனிக்கிழமை நியோர்க்கில் ஆர்தர் ஆஷே அரங்கில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு மற்றும் கனேடிய வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 18 வயதான எம்மா ரடுகானு 6-4 6-3 என்ற கணக்கில் 19 வயது கனேடிய வீராங்கனையை தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இதன் மூலம் எம்மா ரடுகானு பிரிட்டனின் மகளிரிக்கான ஒரு பெரிய கிண்ணத்தின் 44 வருட காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
இறுதியாக 1977 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் ஒரு பெரிய கிண்ணத்தை வென்ற பிரிட்டிஷ் பெண்மணியான வர்ஜீனியா வேட் உணர்ச்சிவசப்பட்ட எமா ரடுகானுவை உற்சாகப்படுத்தினார்.
இந் நிலையில் எம்மா ரடுவானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எலிசபத் மகாராணி, “இது மிகவும் இளம் வயதில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை, இது உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்று” எனக் கூறியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் விம்பிள்டனில் மரியா ஷரபோவாவுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் கிண்ணம் ஒன்றை கைப்பற்றிய இளம் வயதுடைய வீராங்கனை எம்மா ரடுவானு ஆவார்.