பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் சாஹோ. அறிமுக இயக்குனர் சுஜித் இயக்கி வரும் இந்தப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி என மும்மொழிகளில் உருவாகி வருகிறது. கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். வரும் ஆகஸ்ட் 15ல் இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பார்ஷ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சுமார் 42 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளதாம். இது சீனா தவிர்த்து மற்ற மொழிகளுக்கான ஓவர்சீஸ் உரிமை மட்டுமே.. பாகுபலி திரைப்படம் மூலம் பிரபாஸிற்கு சீனாவில் ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளதால் சாஹோ படத்திற்கு சீனாவில் மட்டுமே தனியாக மிகப்பெரிய விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.