வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோதமாக நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான 50,000 சிகரெட்டுகளை கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் புதன்கிழமை (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
டுபாய்- அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சட்டவிரோதமாக சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை கடத்த முயன்ற பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது 50,000 சிகரெட்டுகள் அடங்கிய 250 கார்ட்டூன்கள் அவர்களது பயணப் பைகளில் இருந்த சுங்கப் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் போது கைதுசெய்யப்பட்டவர்கள் 45 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சிகரெட்டுகள் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்கப் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.