இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 40 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.
நான்கு மீன்பிடிக் கப்பல்களில் மன்னார் கடற்பரப்பில் இவர்கள் அத்துமீறி பிரவேசித்தனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பரப்பில் 24 மணி நேரமும் கடற்படையினர் ரோந்துப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை.