சைபீரியாவில் 40 அடி உயர கட்டிடத்திலிருந்து சாசக இளைஞரின் சடலம் பனி சூழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
யூவ்ஜெனி டிகோனோவ் (26) என்ற இளைஞர் உயரமான கட்டிடங்கள் மீது ஏறுவதில் வல்லவராவார், இதை தொழில்முறையாகவே அவர் கற்றுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் 40 அடி உயர கட்டிடத்தில் யூவ்ஜெனி சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.
அவர் தலைப்பகுதி முழுவதும் பனி படர்ந்திருந்தது, இதை பார்த்த இளம் பெண் ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை மீட்டனர்.
அவர் தற்கொலை செய்திருக்கலாம் என யாரும் இதுவரை கூறவில்லை, யூவ்ஜெனி உயிரிழந்த இரவில் – 27சி அளவு குளிர் இருந்துள்ளது.
இதை விட மிக பெரிய உயரமான கட்டிடங்களில் எளிதாக ஏறியிருக்கும் யூவ்ஜெனியின் இறப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரின் இறப்புக்கான காரணம் மற்றும் சூழல் என்னவென இன்னும் தெரியாத நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.