ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டு செய்துள்ள 4 நாட்கள் கொண்ட ‘நெஷனல் சுப்பர் லீக்’ கிரிக்கெட் தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமையன்று ஆரம்பமாகவுள்ள அரையிறுதிப் போட்டிகளில் ஒரு போட்டிய ஹம்பாந்தோட்டை மஹிந்ர ராஜபக்ச கிரிக்கெட் மைதானத்திலும் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் நடத்தப்படவுள்ளன.
‘நெஷனல் சுப்பர் லீக்’ கிரிக்கெட் போட்டித் தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்த்தாடியிருந்தது.
இதில், கொழும்பு அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியை ஈட்டியது.
அவ்வணி, ஒரு போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்து, மொத்தமாக 56.51 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியிலில்முதலிடத்தைப் பிடித்தது.
4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கண்டி அணி, ஒரு தோல்வி, ஏனைய 3 போட்டிகளிலும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்து 42.24 புள்ளிகளை ஈட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 போட்டிகளில் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்து 36.54 புள்ளிகளை ஈட்டிக் கொண்ட காலி அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
நான்காவது இடத்தைப் பிடித்த யாழ்ப்பாண அணி 32.54 புள்ளிகளை பெற்றது, இதில் ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதுடன் 3 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்தது.
கடைசி இடத்தைப் பிடித்த தம்புள்ளை அணி ஒரு வெற்றியையும் பதிவு செய்யவில்லை.
ஒரு போட்டியில் தோல்வியை தழுவியதுடன் 3 போட்டிகளை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்து 18.77 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]