இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது எரிபொருள் தொகையுடன் கப்பலொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த குறித்த கப்பலில் 35,000 மெட்ரிக் தொன் டீசல் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ள எரிபொருள் தொகை கொலன்னாவ களஞ்சியசாலையில் தரையிறக்கப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனை விரைவில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த இரு வாரங்களாக நாட்டில் தேவையானளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அவை அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படுவதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.
எவ்வாறிருப்பினும் நாட்டின் சகல பகுதிகளிலும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வரிசை குறைவடையவில்லை என்பதோடு, பெரும்பாலான எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எரிபொருளை வழங்குமாறு அறிவுறுத்தல்
அம்புலன்ஸ் வண்டிகளுக்கு தேவையானளவு எரிபொருளை வழங்குமாறு சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோயாளர்களை அவசர சிக்சைக்காக அழைத்துச் செல்வதைக் கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளுக்கு எரிவாயுவை விநியோகிக்குமாறு அறிவுறுத்தல்
வைத்தியசாலைகளுக்கு தேவையானளவு சமையல் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்குமாறு விநியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளை துரிதமாக அது தொடர்பில் அறியத்தருமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]