35 அகதிகள் இன்று நாடு திரும்பினர்!
தமிழகத்தில் இருந்து இன்று 35 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையில் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.
மதுரையில் இருந்து 17 பேரும் சென்னையில் இருந்து 18 பேரும் இரண்டுவிமானங்களில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகை தந்த அகதிகளில் 11 ஆண்கள் மற்றும் 24 பெண்கள் உள்ளடங்கியுள்ளதாகபுனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சிவஞானஜோதிஉறுதிப்படுத்தியுள்ளார்.
வருகை தந்த அகதிகள் மீண்டும் திருகோணமலை,வவுனியா,யாழ்பாணம்,முல்லைதீவு மற்றும்மன்னாரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகள் வருகை தருவதற்கான அனைத்து செலவுகளையும் ஐக்கிய நாடுகளின்அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகமே பொறுப்பேற்றுள்ளது.
இதேவேளை,2011ம் ஆண்டில் இருந்து இதுவரையிலுமான காலப்பகுதியில் 4 ஆயிரத்து835 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு, புனர்வாழ்வுமறுசீரமைப்பு அமைச்சருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் 64 ஆயிரம் அகதிகள்,முகாம்களில் தங்கியுள்ளதாகவும் இந்தியாவில்மொத்தமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப்பதாகவும் அமைச்சர்சுட்டிக்காட்டியுள்ளார்