சையது முஸ்டாக் அலி டிராபி போட்டியில் டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 32 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
மாநிலங்களுக்கு இடையேயான, சையது முஸ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சலப்பிரதேச அணிகள் நேற்று மோதின.
முதலில் விளையாடிய இமாச்சல் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பன்ட், 12 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 116 ரன்களும் காம்பிர் 30 ரன்களும் எடுத்தனர்.
ரிஷப், 32 பந்தில் சதமடித்தார். இதன் மூலம், டி20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரிஷப் பெற்றார். இதற்கு முன், ஐபிஎல் போட்டியில் 30 பந்துகளில் கிறிஸ் கெய்ல் சதமடித்து முதலிடத்தில் உள்ளார்.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஹைதராபாத் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி தோற்கடித்தது. தமிழக அணி7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 42 ரன்களும், விஜய் ஷங்கர் 40 ரன்களும் எடுத்தனர்.
முஹமது ஹஸன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 194 என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியை அடுத்து 16 புள்ளிகளுடன் தமிழக அணி முதலிடத்தில் தொடர்கிறது.