சிங்கப்பூரிலுள்ள 21 வயதைவிட அதிகமான சகலருக்கும் 300 சிங்கப்பூர் டொலர்களை போனஸாக வழங்கவுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் சிங்கப்பூர் டொலருக்கும் அதிகமாக (7.6 பில்லியன் அமெரிக்க டொலர்) மேலதிக வருமானத்தை அரசாங்கம் ஈட்டியுள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பலன் நாட்டு மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த போனஸ் வழங்கப்படுவதாகவும் நிதி அமைச்சர் ஹேன்க் ஸ்வீ கீன் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டையும் சிங்கப்பூர் போன்று மாற்றுவதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுப்பதாக கூறியே ஆட்சிக்கு வருகின்றது. இறுதியில் கடன் சுமைகளையே நாட்டு மக்கள் மீது வரிகளாக சுமத்தி வருகின்றன என்பது பொது மக்களின் மீளாத ஏக்கமாகும்.