300 கிலோ எடை கொண்ட கடல் நண்டை கடலுக்குள் விட்ட கனேடியர்: காரணம் என்ன?
கனடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இளவரசர் எட்வர்ட் தீவுகளில் குடியிருந்து வரும் புத்த பிட்சு ஒருவர் இரக்கத்தை பயிரிடுவோம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்த திட்டத்தின் ஒருபகுதியாக மீன்பிடி படகு ஒன்றில் சிக்கிய சுமார் 300 கிலோ எடை கொண்ட கடல் நண்டு ஒன்றை விலை கொடுத்து அந்த பிட்சு வாங்கியுள்ளார்.
20 நிமிடங்கள் மதரீதியிலான சடங்குகள் மேற்கொண்ட பின்னர் அந்த 300 கிலோ கடல் நண்டை கடலுக்குள் திரும்ப விட்டுள்ளார்.
சிக்க வைக்கும் வலைகள் எதுவும் இல்லாத பகுதிக்கு அந்த நண்டு சென்றுவிட வேண்டும் என்பதே தங்களின் வேண்டுதலாக உள்ளது என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு பிட்சு தெரிவித்துள்ளார்.
அனைவரது உணவுக்கொள்கைகளையும் மதிப்பதாக கூறும் அந்த பிட்சு, புலால் உண்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைவரும் சைவமாக வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்க இந்த நிகழ்வினை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு மீனவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/65645.html#sthash.Kl2qj3Kl.dpuf