3-வது டெஸ்ட் போட்டியில் தவானுக்கு பதிலாக கருன் நாயர் தேர்வு காரணம் என்ன?
நியூசிலாந்து கிரி்க்கெட் அணிக்கு இடையேயான 3 டெஸ்ட் தொடர் போட்டிகளில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய மண்ணில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் தொடர் தர வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய பவுன்சர் பந்து ஒன்று, தவானின் இடது கையை பலமாக பதம் பார்த்தது.
இதைத் தொடர்ந்து, காயம் குறித்து மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் 10-15 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதனால், வருகிற 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் தாவானுக்கு பதிலாக கருண் நாயர் களமிறங்குவார் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.