3 நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை
அமெரிக்க பொப் பாடகர் டோனி வால்பெர்க் மூன்று நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலகம் முழுவதும் செல்பி பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இதற்கென பிரத்யேக ஸ்மார்ட்போன்களும் வந்துவிட்டன, இந்நிலையில் அமெரிக்க பொப் பாடகர் டோனி வால்பெர்க் தனது குழுவினருடன் சேர்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வெறும் மூன்று நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்துள்ளனர், இதுவரையிலும் 119 செல்பிகள் எடுத்ததே இதுவரையிலும் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.