மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (15) ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை இந்த பொது மயானத்திலே இந்த உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.
இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செய்வதற்கு 5 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் அனைத்து சமூகங்களுடைய உடல்கள் அடக்கம் செய்துவருகின்றோம்.
இதுவரையில் 2850 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளாந்தம் அதிகமான உடல்கள் வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.