2500 புதிய அங்கத்துவர்களை கட்சிக்கு இணைத்து விட்டேன். வெற்றிக்கணி எனது கையில் – பிரகலாதன் திருஞானசுந்தரம்
லிபரல் கட்சியின் உள்ளகத் தேர்தலிலே போட்டியிட்டு அந்தக் கட்சியின் வேட்பாளாராகத் தெரிவாக முயலும் “பிரகல் திரு” மிகவும் கடினமாக புதிய அங்கத்துவர்களைச் லிபரல் கட்சிக்கு இணைப்பதில் முயன்று கொண்டிருந்தார்.
சிறுவயது முதலே தமிழர்கள் சார்ந்த விடயங்கள் என்றில்லாது பல்துறையிலும் தொண்டார்வ ரீதியில் செயலாற்றி வரும் பிரகலாதன் திருவை இந்தத் தேர்தல் களத்தில் ஆதரிப்பதற்காக ஒரு இளைஞர் பட்டாளமே அணி திரண்டுள்ளது.
தான் செல்கின்ற இடமெல்லாம் தனக்குக் கிடைக்கின்ற இதய சுத்தியான வரவேற்பும், கட்சியின் அங்கத்ததுவர்களாக இணைகின்ற பாங்கும் தனக்கு இந்தத் தேர்தல் தொடர்பாக நம்பிக்கையை வளர்ப்பதாகத் தெரிவித்த பிரகல் திரு,
2,500 அங்கத்துவர்கள் தாமாக முன்வந்து தங்களது பணத்தைச் செலுத்தி அங்கத்துவர்களாவதற்கான முயற்சி என்னுடையதாக இருந்தாலும், எனக்கு உதவும் தொண்டர்களே அதற்கான முழுத் தகுதியையும் பெறுகின்றார்கள் எனக் குறிப்பிட்டார்.
ராதிகா சிற்சபைஈசன் தற்போது லிபரல் கட்சியில் இணைந்து பிரகலிற்கு ஒரு போட்டியாளராக மாறியுள்ளத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரகல் “எனக்கு கட்சியின் கொள்கைகளும், தொகுதிவாழ் மக்களின் பிரச்சினைகளுமே முக்கியம், யார் என்னுடன் போட்டியிடுகின்றார்கள் என்பதல்ல” எனத் தெரிவித்தார்.
மாகாண லிபரல் கட்சியின் துணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிரகல் திரு, கனடியத் தமிழர் பேரவையின் முன்னைநாள் இயக்குனர்சபை உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ராதிகாவும், பிரகலும் சிறுவயதிலேயே கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் என்பது மாத்திரமல்ல, இவரும் ஒரே நடனப்பள்ளியில் ஒரு ஆசிரியரின் மாணக்கராக இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.