இரண்டு தனித்தனியான சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டதற்காக 24 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள டமன்ஹோர் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டில் கடலோர பெஹீரா கவர்னரேட்டில் பொலிஸ் அதிகாரிகளை கொண்டு செல்லும் பஸ் மீது குண்டு வீசியதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட குற்றங்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன.
இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 8 பேர் ஆஜராகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எகிப்தில் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
எனினும் இந்த தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்படலாம்.